விமானப் பயணம்னாலே இப்போல்லாம் நிம்மதியை விட டென்ஷன் தான் அதிகமா இருக்கு. குறிப்பா ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் போர்டிங் கேட் இப்போ ‘பணம் பறிக்கும் இடமாக’ மாறிவிட்டதாகப் பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், கேபின் லக்கேஜ் 7 கிலோவுக்குச் சற்று அதிகமாக இருந்ததற்காகப் பயணிகளிடம் ஊழியர்கள் கடுமையான அபராதம் கேட்பதும், அதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றுவதும் தெளிவாகத் தெரிகிறது. “விமானம் கிளம்பப் போகுது, சீக்கிரம் பணத்தைக் கட்டுங்க இல்லன்னா போக முடியாது” என ஊழியர்கள் நெருக்கடி கொடுப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.
एयरपोर्ट पर असली उड़ान रनवे से नहीं, आपकी जेब से शुरू होती है।
स्पाइसजेट ने बोर्डिंग गेट को लूट का अड्डा बना दिया।
पैसेंजर्स पहुंचते हैं-तो हैंड बैगेज वजन चेक, 7 किलो से एक ग्राम ज्यादा तो हजार-दो हजार का जुर्माना। बोर्डिंग का वक्त, फ्लाइट छूटने की टेंशन, मजबूरी में पेमेंट। न… pic.twitter.com/YD0P3Q4PP1
— Rajneeti Tadka 🌶️ (@RajneetiTadka) February 12, 2026
”ஒரு கிராம் கூடினால் கூட 1000 முதல் 2000 ரூபாய் வரை கறக்கிறார்கள், இது பகல் கொள்ளை” என எக்ஸ் (X) தளத்தில் பதிவுகள் தெறிக்கின்றன. ஏற்கனவே 2025-ல் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் தாக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்து ‘Boycott SpiceJet’ ட்ரெண்டிங் ஆனது நினைவிருக்கலாம். “விதிமுறைகளை முன்கூட்டியே சரியாகச் சொல்லுங்கள் அல்லது கண்ணியமாக நடத்துங்கள்” என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்தத் தொடர் சர்ச்சைகளால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நற்பெயர் இப்போ செம்ம ‘டேமேஜ்’ ஆகிட்டு இருக்கு.
