அமெரிக்கா நேற்று முன்தினம் அதிகாலை வெனிசுலா மீது நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது நள்ளிரவில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்ததோடு பின்னர் அவர்களை நியூயார்க் அழைத்து வந்தனர்.
போதை பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்ததாக ட்ரம்ப் அறிவித்தார். பின்னர் வெனிசுலாவை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் கூறினார். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் அந்த நாட்டின் துணை அதிபரை தற்காலிக அதிபராக நியமித்தது.
இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா வெனிசுலாவை நேரடியாக நிர்வாகம் செய்யும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ வெனிசுலாவை நேரடியாக ஆட்சி செய்யப் போவது கிடையாது எனவும் எண்ணெய் வள கட்டமைப்புகளை பயன்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
