தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆக இருந்த செங்கோட்டையன் சமீபத்தில் தன்னுடைய கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் பின்னர் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக விஜய் நியமித்த நிலையில் 4 மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருந்தார். அதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இருந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் ஜெயலலிதாவா என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். மேலும் இதனால் சர்ச்சை எழுவதை உணர்ந்த செங்கோட்டையில் இன்று அந்த போஸ்டரை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அதிமுக கட்சியின் தலைவர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் போட்டோக்களை செங்கோட்டையன் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
