பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் கட்சியின் தலைவர் நான் தான் என்று அன்புமணி கூறியதோடு அதற்கு உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததாகவும் இதனால் இந்திய தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையமும் அன்புமணி தரப்பும் சேர்ந்து மோசடி செய்து பாமக கட்சியை பறிக்கப் பார்ப்பதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டிய நிலையில் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று பாமக சார்பில் டெல்லி ஜலந்தர் பகுதியில் போராட்டமும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இருதரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் படிவம் A, B-ல் இரு தரப்பும் கையெழுத்து போடுவது ஏற்காமல் சின்னத்தை முடக்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக பாமக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
