சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்கள் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளபட்டி மற்றும் திருத்தங்கல் வல்லாளர் நகர் பகுதிகளைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆவர். வரவிருக்கும் தேர்தலை மையமாகக் கொண்டு, மாற்றுக் கட்சியினர் மற்றும் இளைஞர்களைத் தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அ.தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
