தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இங்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் எனவும் டபுள் இன்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த ஊழல் லட்சம் மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவோம் என்றும் கூறினார். இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…

நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

மேலும் தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது என்று பதிவிட்டுள்ளார்.