கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் HD குமாரசாமி அவர்கள் தீபாவளி அன்று தனது வீட்டை அலங்கரிக்க மின்சாரத்தை திருடியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து எக்ஸ் வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் மின்கம்பம் ஒன்றிலிருந்து வீட்டிற்கு மின்சாரம் எடுத்திருப்பது பதிவாகி இருந்தது. இது குறித்து குமாரசாமி அவர்கள் கூறுகையில் இதில் தனது தவறு எதுவும் இல்லை என்றும் வீட்டை அலங்கரிக்க வந்தவர் தான் நேரடியாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி தனக்கு தெரிய வந்தவுடன் அந்த இணைப்பை துண்டிக்க செய்து வீட்டில் உள்ள மீட்டர் பெட்டியில் இணைப்பை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட குமாரசாமி அவர்கள் மின் ஊழியர்கள் தனது வீட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான அபராதத்தை தான் செலுத்த தயார் என்றும் கூறியுள்ளார்.