குஜராத் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் வெளியே வந்த சிறுமியை, அவருக்கு அறிமுகமான மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
அருகில் உள்ள ஒரு தடுப்பணைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுமியை, அங்கு காரில் காத்திருந்த மேலும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து அந்த கும்பல் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி நடந்தவற்றைத் தனது தாயிடம் கூற, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வன்ஸ்தா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி அடையாளம் காட்டிய அவரது நண்பர்கள் மூன்று பேரை முதலில் பிடித்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் படி தலைமறைவாக இருந்த மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர்.
தற்போது கைதான 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
