மும்பை பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல் துறையினர், அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பதை தற்போது உறுதி செய்துள்ளனர்.

குறிப்பாக, அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அன்று உட்கொண்ட தர்பூசணி பழத்தில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. தடயவியல் அறிக்கையின்படி, தர்பூசணி மற்றும் உயிரிழந்தவர்களின் உடலில் ‘துத்தநாக பாஸ்பைடு’ என்ற நச்சுப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

இது பொதுவாக விளைநிலங்களில் எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான வேதிப்பொருள் ஆகும். இந்த நச்சு கலந்த தர்பூசணியைச் சாப்பிட்டதே அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மரணத்திற்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட சதிச் செயலா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.