மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பராக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜ் சக்ரவர்த்தி, பாஜக வேட்பாளர் கௌஸ்தவ் பக்சியிடம் தோல்வியடைந்தார். 2021-ஆம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ராஜ் சக்ரவர்த்தி, இந்த முறை 15,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார். இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், தனது அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஒரு இயக்குநராகத் தனது படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்க எப்போதும் முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றியதாகக் கூறியுள்ளார். 2026-ஆம் ஆண்டுடன் தனது அரசியல் அத்தியாயம் நிறைவடைவதாகவும் அவர் அந்தப் பதிவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
