தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் ஆன தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்த போதிலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் இன்னும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்ததால் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று தங்களுடைய முடிவை அறிவித்தால் நடிகர் விஜய் ஆட்சி அமைப்பாரா இல்லையா என்பதற்கான விடை கிடைத்துவிடும்.

இதற்கிடையில் அமமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்னார்குடி எம்எல்ஏ வை தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டிய நிலையில் பின்னர் போலி கையெழுத்தை கொடுத்து ஆட்சியில் அமர முயற்சி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். இதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமி குதிரை பேர அரசியலை தடுப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் இன்று காலை அவசரமாக சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள். மேலும் தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய் முதல்வராகும் வரை இந்த பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.