
நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் ரேஷன் உணவு திட்டம். ஏழை மக்களுக்காக மத்திய அரசு ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவச உணவு வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டுகள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகளால் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக அரசு சில தகுதிகளை நிர்ணயித்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் தான் மக்கள் ரேஷன் கார்டுகளை பெறுகிறார்கள். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்கும் நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பிறப்பொருட்களை மத்திய அரசு வழங்குகிறது. இலவச ரேஷன் மட்டுமல்லாமல் மாநில அரசிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும். தமிழகத்தை பொறுத்தவரை தற்போது பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற ரேஷன் கார்டு அவசியமாகும். அதனால் பலரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படும்.
உங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை என்றால் நீங்கள் அதனை மிக எளிதாக வாங்கலாம். இதற்காக உங்கள் நகரின் வட்ட அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்ப வேண்டும். படிவத்தை ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். பிறகு பூர்த்தி செய்த படிவத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் உங்களுடைய ரேஷன் கார்டு ஒரு மாதத்தில் உங்கள் வீடு தேடி உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.