சமீபத்தில் ஒரு வினோதமான பரிசோதனைக் காணொளி சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில், வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் ஃபேன்டா குளிர் பானத்துடன் கோல்கேட் பற்பசையைக் கலந்து, பாத்திரங்களைக் கழுவுவதற்கான ஒரு புதிய கரைசலை உருவாக்குவதைக் காட்டுகிறார். இந்தக் கலவை மூலம் கருப்பாக மாறிய பாத்திரங்களை மிக விரைவாகவும், முழுமையாகவும் சுத்தம் செய்யலாம் என்று அந்த வீடியோ கூறுகிறது.

வீடியோவில், அவர் பற்பசையை ஃபேன்டா பாட்டிலில் சேர்த்து குலுக்கி, பிறகு அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் இரண்டு டீஸ்பூன் சோப்பு மற்றும் பேக்கிங் சோடாவையும் சேர்த்து கலக்கிறார். இந்த விசித்திரமான கலவை ஒரு சக்திவாய்ந்த துப்புரவுப் பொருளாகச் செயல்படுவதாகவும், இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் @_learnskills என்ற பயனர் பெயரில் பகிரப்பட்ட இந்தக் காணொளி மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

“>

 

ஆனால், இந்த பரிசோதனையைப் பார்த்த பலர் ஆச்சரியப்பட்டாலும், அதன் செயல்பாடு குறித்து சந்தேகமும் எழுப்புகின்றனர். “இது ஒரு மோசமான யோசனை” என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் சிலர், “கடையில் இருந்து துப்புரவு கரைசலை வாங்குவதே எளிதானது.

இந்த மூன்று பொருட்களையும் வாங்கி கலவையாக்குவது பணத்தை மிச்சப்படுத்தாது; மாறாக, மூன்றையும் சீக்கிரத்தில் தீர்த்துவிட்டு, மீண்டும் கடைக்குச் சென்று வாங்க வேண்டியிருக்கும்” என்று கூறி இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். விசித்திரமான இந்த வீட்டுப் பரிசோதனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.