ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், ஜெப்டோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் டெலிவரி பாய் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தன்று, நிறுவனத்தின் கடைக்கு வெளியே உள்ள ஒரு நாற்காலியில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென கீழே விழுந்தார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அதனை கவனித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
हरियाणा के फरीदाबाद में जेप्टो कंपनी के डिलीवरी बॉय की हार्टअटैक से मौत हो गई। डिलीवरी बॉय कपंनी के स्टोर के बाहर कुर्सी पर बैठा था। इस दौरान वह अचानक नीचे गिर गया। ये पूरी घटना सीसीटीवी कैमरे में कैद हो गई। डिलीवरी बॉय को इलाज के लिए एक निजी अस्पताल लेकर जाया गया, लेकिन तब तक… pic.twitter.com/b8gJRXpr2H
— NBT Hindi News (@NavbharatTimes) August 1, 2025
இந்த சம்பவம் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் விரைவாக பரவி வருகிறது. சமீப காலங்களில் இளம் வயதினரிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், உடற்பயிற்சியில், வேலை நேரங்களில் அல்லது ஓய்வான தருணங்களில் கூட மாரடைப்பால் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியாக இருந்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள், அழுத்தம், தூக்கமின்மை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சி குறைவு ஆகியவையும் இளைய தலைமுறையினரின் மாரடைப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறி எச்சரிக்கின்றனர்.
