நேபாள அரசால் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 முக்கிய சமூக வலைதள செயலிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்கள் பரபரப்பாக மாறி, வன்முறையாகச் சிதறியதனால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளாவிய கவனத்தை பெற்றது. ஏற்பட்ட அதிர்வில், நேபாள அரசு சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியதாக அறிவித்தது. இருப்பினும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபம் இன்னும் அடங்காத நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது.

“>

 

தடை நீக்கப்பட்ட பிறகும், சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர்கள் வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

“>

 

இதன் காரணமாக தலைநகர் காட்மாண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் போலீசார் கணிசமாக குவிக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமை தீவிரமடைந்து வருவதால், அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.