இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி வித்தியாசமான வீடுகளைக் கட்டி வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உள்ள வீடு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடு தரை மட்டத்திலிருந்து சற்று உயரமாகக் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக இது போன்ற வீடுகளுக்குச் செல்ல படிக்கட்டுகள் அல்லது சாய்தளங்கள் (Ramp) அமைக்கப்படுவது வழக்கம்.
— Viral Beast (@kumarayush084) April 10, 2026
ஆனால், இந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் வித்தியாசமாக, தண்ணீர் தொட்டியின் மீது ஏறுவதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்பு ஏணியைப் போன்ற ஒரு அமைப்பை நுழைவாயிலாக அமைத்துள்ளார்.
இந்தக் குறுகலான மற்றும் செங்குத்தான ஏணியில் ஏறிச் செல்வது சாதாரணமான விஷயம் அல்ல. ஒவ்வொரு முறை வீட்டிற்குள் செல்லும்போதும், வெளியே வரும்போதும் சர்க்கஸ் செய்வது போல இந்த ஏணியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த நெட்டிசன்கள், “இந்த வீட்டுக்குள்ள போகணும்னா ஜிம்முக்கு போய் ட்ரெய்னிங் எடுக்கணும் போலயே!” என்றும், “திருடர்கள் பயமே இருக்காது, ஏன்னா அவங்களால இதுல ஏறவே முடியாது!” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதே சமயம், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தான மற்றும் அசௌகரியமான விஷயம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, இந்த ‘ஏணி வீடு’ தற்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்!
