திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள் ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் சொல்லக்கூடாது என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி செய்வதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமித் ஷா செய்துள்ள இந்த அரசியல் சதியால்தான் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமான முறையில் இணையத்தில் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர்களின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கவும், அவர்களைத் தங்களுக்குக் கட்டுப்பட வைக்கவும் இதுபோன்ற வேலைகள் செய்யப்படுவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த ‘சதி’ புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.