
தமிழகத்தில் விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. இதுவரை ஒரே ஆண்டில் இரண்டு முறை கொள்முதல் விலையை உயர்த்திய ஒரே அரசு திமுக அரசு தான். இந்த ஆண்டு இரண்டு தவணைகளாக ஆறு ரூபாய் வரை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.