தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இருந்த நிலையில் இந்த வருடம் முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களும் விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ஏதாவது குறைகள் இருந்தால் அந்த விடைத்தாளை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பின்னர் மதிப்பெண் குறைந்தால் பழைய மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மறு மதிப்பீட்டில் வரும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பொதுத்தேர்வு எழுதும் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.