வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விளையாட்டு ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இந்த இரண்டு விளையாட்டுகளும் மீண்டும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், 2030 காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி தவிர கபடி, மல்லர்கம்பம், கோ-கோ மற்றும் யோகா ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளில் இருந்து இரண்டு போட்டிகள் புதிதாகச் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
