பிரிட்டன் டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆன chroming challenge ஐ செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு 11 வயது சிறுவன் டாமி லீ கிரேசி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேலஞ்சை செய்த பிறகு யாரிடமும் பேசாமல் இருந்த சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் உள்ள தின்னர், வார்ணிஷ், நெயில் பாலிஷ், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களை நுகர்ந்து பார்ப்பது தான் Chroming Challenge என கூறப்படுகிறது.