மார்ச் 8 என்றாலே சர்வதேச பெண்கள் தினம்தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் இஸ்ரேல் காசா போர் நினைத்தால் பெண்கள் தினத்தை கொண்டாடவே மனம் வராது. அந்த அளவிற்கு அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போர் 150 நாட்களை தாண்டி விட்டது. இரு தரப்பிலும் சேதங்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் காசாவின் நிலைதான் பெரிதும் கவலை கொள்ளும் விதமாக உள்ளது. இந்த போர் சூழல் காரணமாக 60,000 கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவு கிடைக்காத நிலையில் உள்ளார்கள்.

இவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளும் இல்லை. காசாவில் ஒவ்வொரு மாதமும் 5000  பெண்களுக்கு குழந்தை பிறக்கிறது.  தற்போதைய போர் சுழலில் பிறக்கும் குழந்தைகளுக்கு போதிய உணவு கொடுக்க முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது .பச்சிளம் குழந்தைகள் பலவும் பசியால் உயிரை விட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளது  என்றுசர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அமைப்புகள் நிறுவனங்கள் அனைத்தும் பாலஸ்தீன பெண்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.