பெண்களுடைய நலத்தில் மத்திய, மாநில சுகாதார துறையும் இணைந்து பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவர்களுக்கு என்று தனித்திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றை செய்து வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்தில் வீட்டில் இருந்து அழைத்துச் செல்வது முதல் டெலிவரி முடித்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வரையிலும் அனைத்து செலவையும் அரசே ஏற்கும் திட்டமும் இருக்கிறது . இந்த திட்டம் பெரும்பாலும் நகரப்புற பெண்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற பெண்களும் பயன்படுத்துவதில்லை.

இந்த திட்டம் என்ன இதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம். ஜனனி-ஷிஷு சுரக்ஷா காரியக்ரம் திட்டம் என்பது கிராம மற்றும் நகர்புறம் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான காசு இல்லாத இலவச பிரசவத் திட்டம். கடந்த 2016 வருடம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2014ஆம் வருடம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடங்கி பிரசவம் முடிந்து வீட்டில் கொண்டு விடும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வருவது உள்ளிட்ட அனைத்தையும் அரசை ஏற்றுக்கொள்ளும். கர்ப்பிணி பெண்கள் எல்லோருமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பட முடியும். எல்லா அரசு மருத்துவமனைககளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து ஜனனி சுரக்ஷா அட்டை வாங்கி வைத்துக் கொண்டாலே போதும். இந்த திட்டத்தில் பயன் பெற ஆதார் எண் முகவரிக்கான ஆதாரம், குடியிருப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஜனனி சுரக்ஷா அட்டை போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும் அனைத்து நாட்களும் உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவை கிடையாது.