திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்து வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் வெறும் 35 ரூபாய் செலவில் திருப்பதிக்கு ரயில் பயணம் மேற்கொள்ள முடியும். சென்னையிலிருந்து தினமும் திருப்பதிக்கு எட்டு பட்டிகள் கொண்ட MEMU  என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் சென்னையில் இருந்து திருப்பதிக்கு 35 ரூபாய் கட்டணத்தில் செல்ல முடியும். சென்னை சென்ட்ரல் லோக்கல் நடைமேடையில் இருந்து ரயில்  தினமும் காலை 9 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் மதியம் 1:30 மணியளவில் திருப்பதி சென்றடையும். எட்டு பெட்டிகள் இருப்பதால் பயணிகள் நெருக்கடி இல்லாமல் தாராளமாக அமர்ந்தபடி செல்ல முடியும் .குறைந்த பட்ஜெட்டில் விரைவாக திருப்பதி செல்ல நினைக்கும் பக்தர்கள் இந்த ரயில் பயணத்தை தேர்வு செய்யலாம்.