அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் ஜன.21ஆம் தேதி சேலம் இளைஞரணி மாநாடு நடத்திய ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

2019ல் திமுக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி, 2022ல் அமைச்சராக பதவி ஏற்றார். உதயநிதி துணை முதல்வராவது குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.