பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அனைத்து இந்திய மொழிகளிலும் ‘விஸ்வநேதா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இளம் இயக்குநர் சிஎச் கிராந்தி குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வந்தே மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் காசிரெட்டி சரத் ரெட்டி தயாரிக்கிறார். டீக்கடைக்காரராக இருந்து பிரதமர் பதவி  வரை உயர்ந்திருக்கும் மோடியின் உழைப்பை இப்படத்தில் முழுமையாக பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.