அயோத்தியில் நேற்று  திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆண்கள், வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம்.

ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியக்கூடாது. பெண்கள், புடவை, பட்டு சேலை, சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கர்ட் துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடை, இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.