இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின்படி பள்ளி மற்றும் உயர் கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் படிக்கலாம். இதனால் இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவில் அனைத்து பாடப்பொருட்களையும் தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அனுவாதினி என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் UGC, AICTE, NCERT, NIOS, IGNOU ஆகிய அனைத்து பள்ளி மற்றும் உயர் கல்வி கட்டுப்பாட்டாளர்களுக்கும்  IIT, CU, NIT போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கும் படிப்பு பொருட்களை தயாரிக்க வேண்டும் என்று மத்தியகல்வி அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.