இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. பயனர்கள் அரசின் திட்டங்களை பெறுவதற்கும், பள்ளியில் சேர்வது என அனைத்துக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாக உள்ளது. இந்த நிலையில் EPFO பிறந்த தேதிக்கான ஒப்புதல் ஆவண பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை நீக்கம் செய்துள்ளது.

அதனால் இனிவரும் நாட்களில் பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் கார்டை யாரும் வழங்க முடியாது. இருந்தாலும் ஆதார் கார்டுக்கு பதிலாக பிறந்த தேதிக்கான சான்றாக பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சிவில் தர்ஷன் வழங்கிய மருத்துவ சான்றிதழ் மற்றும் அரசு பென்ஷன் ஆகிய ஆவணங்களை வழங்கலாம். குறிப்பாக இந்த ஆவணங்களில் உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் இனி நீங்கள் இந்த ஆவணங்களை சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.