அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஆண்கள் வேஷ்டி சட்டை, குர்தா பைஜாமா, முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம். ஷார்ட்ஸ், டி ஷர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய கூடாது. பெண்கள் புடவை, பட்டு சேலை, சல்வார் கமீஸ், லெகங்கா சோலி அணியலாம். பிளவுஸ் உடன் கூடிய லாங் ஸ்கர்ட் துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடை மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
