உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார்.

இதில் ஆட்குறைப்பு, ‘ப்ளூடிக்’ வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், தற்போது நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத ட்வீட்டர் கணக்குகள் நீக்கப்படும் என மஸ்க் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.