இன்றைய காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள். செல்போன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு செல்போன் என்பது தற்போது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது.

வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போனில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 12% அதிகம் என்று  சீன விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். மொபைல் போன்கள் குறைந்த அளவிலான கதிரியக்க அதிர்வெண் ஆற்றலை வெளியிடுகின்றன, இது குறுகிய கால வெளிப்பாட்டிற்குப் பிறகு இரத்த அழுத்தம் அதிகரிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு கூறுகிறது.