பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட 120 வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி  இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்து இம்ரான் கானை கைது செய்ததில் இம்ரான் கான் மற்றும் அவரது வழக்கறிஞர் காயம் அடைந்துள்ளனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தடுக்கும் பொருட்டு இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்ட விரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிதிமன்றத்திற்குள் யாரையும் கைது செய்யக்கூடாது என்று தெரிவித்ததோடு ஒரு மணி நேரத்தில் அவரை ஆஜர் படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.