இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு பிறகு அவருடைய மூத்த மகன் இரண்டாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த 6-ம் தேதி இரண்டாம் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி கமிலா ஆகியோருக்கு முடி சூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் முடி சுட்டு விழாவின்போது மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் ராணி தமிழ் ஆகியோர் வெள்ளை நிற வெல்வெட் உடையை அணிந்திருந்தனர்.

இந்த உடையின் ரகசியம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ராணி கமிலா  அணிந்திருந்த உடையில் தங்கம் மற்றும் வெள்ளி நிற நூழிலைகளால் எம்ராய்டிங் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு ராணி கமிலாவுக்கு நெருக்கமானவர்களின் பெயரும் அந்த உடையில் தங்க நிற எம்ராய்டு டிசைன் மூலம் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் செல்லமாக வளர்த்து வரும் இரண்டு நாய்களின் உருவமும் அந்த உடையில் இடம்பெற்று இருந்தது. மேலும் இந்த பிரம்மாண்ட ஆடையை மறைந்த இளவரசி டயானாவுடன் பணியாற்றிய Bruce Oldfield என்பவர் வடிவமைத்துள்ளார்.