விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக நன்மைகள் உங்களைத் தேடி வரும். நலம் தரும் வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் திட்டமிட்டு வருமானத்தை அதிகரிப்பீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது கடினம்.

எதிர்பாராத பேச்சு வருத்தத்தை கொடுக்கும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். நியாயமாக நடந்து கொள்வீர்கள். கோபத்தை தவிர்த்து விடுங்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகள் விறுவிறுப்பாக நடக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். இன்று பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப தேவை பூர்த்தியாகும்.

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் மேம்படும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்