தனுசு ராசி அன்பர்களே,

இன்று மன பதட்டம் இல்லாமல் தைரியமாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். கருத்துக்களை கூறும் போது கவனமாக இருங்கள். மன சஞ்சலம் ஏற்பட்டாலும் மன அமைதியுடன் இருந்தால் எல்லாம் சரியாகும். தயவு செய்து மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சினைகள் ஓரளவு தீரும். எந்த பிரச்சினையிலும் தலையிட வேண்டாம். பஞ்சாயத்துகள் பண்ண வேண்டாம். சாமர்த்தியமாக நடந்து கொண்டால் வெற்றி பெற முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெண்கள் காரியங்களில் கவனமாக இருங்கள். அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள். முன்கோபத்தை விட்டு விடுவது நல்லது.

எந்த ஒரு பெரிய பிரச்சினையும் சமாளித்து விடுவீர்கள். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்