மகரம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் நாளாக இருக்கும். திறமையால் வெற்றி பெற முடியும். மன பதட்டம் இல்லாமல் இருக்க பாருங்கள். மனதில் ஒருவித சந்தோசம் ஏற்படும். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்று மதிப்பு உயரும். பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.

மன பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். குழப்பங்களுக்கு ஆளாக வேண்டாம். சரியானதை மட்டும் செய்யுங்கள். பிறர் குறை கூறா வண்ணம் நடந்து கொள்ள பாருங்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். காரியத்தடை தாமதம் விலகும். பெண்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டாம். இன்று மாணவர்கள் மொழி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியவர்களின் சொல் கேட்டு நடக்க வேண்டும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்