கும்பம் ராசி அன்பர்களே,

இன்று எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் தாமதம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். சுறுசுறுப்புடன் பணிகள் மேற்கொண்டு வெற்றி பெறப் பாருங்கள். அது மட்டும் இல்லை இன்று உணவு விஷயங்களில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். முறையற்ற வழிகளில் சென்றால் துயரப்பட வேண்டி இருக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் அடையலாம். திறமையால் வெற்றி பெற முடியும். மனம் தளராமல் எந்த செயலிலும் ஈடுபடுங்கள். திடீர் கோபம் ஏற்படும். கவனமுடன் பேசுவது நல்லது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும்.

மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் மற்றவர்களுக்கு கருத்துக்கள் எதுவும் சொல்ல வேண்டாம். கல்வியில் அக்கறை கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்