விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று புது புது எண்ணங்கள் மனதில் தோன்றும். காலையில் நல்ல செய்தி வரும். பேச்சில் மங்களத்தன்மை ஏற்படும். விலகிச் சென்ற உறவினர்கள் வந்து இணைவார்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். நட்பால் நல்லது நடக்கும். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். குடும்பத்தாருடன் சேர்ந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

வருமானம் சீராக வரும். வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஏனென்றால் விஷயங்களில் ஈடுபட வேண்டாம். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும்.

மன தடுமாற்றம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். இன்று மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். உயர் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்