விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக மனம் சந்தோஷம் அடையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் நலன் கருதி சில முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய வீடு கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். கண் சம்பந்தப்பட்ட சில உபாதைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருங்கள். திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கொள்ள முடியும் கூர்மையான பொருட்களை கையாளும்போது கவனமாக இருங்கள். இந்த நாள் உயர்வான நாளாகவே இருக்கும். இன்று பெண்களுக்கு எந்த பிரச்சினையும் சரி செய்து கொள்ள முடியும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். எதை நினைத்தும் குழம்பி கொள்ள வேண்டாம். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபட வேண்டும். இன்று மாணவர்கள் கல்விக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. முயற்சி செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம். சக மாணவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்