சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும், பார்வைகளுக்காகவும் இளைஞர்கள் செய்யும் எல்லை மீறிய செயல்கள் தற்போது முகம் சுளிக்க வைத்து வருகின்றன. அந்த வகையில், ‘ஹைவே கிங்’ (Highway King) ஹோட்டலின் கழிவறையில் ஒரு இளைஞர் கும்பல் செய்துள்ள காரியம் இணையத்தில் பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்த வீடியோவில், ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் கை கழுவும் திரவத்தை (Liquid Handwash) மீண்டும் மீண்டும் அழுத்தி எடுத்து, கைகளைக் கழுவாமல் வேண்டுமென்றே கழிவுநீர்க் குழாயில் ஊற்றி விளையாடுகின்றனர். பொதுமக்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளை இப்படி வேடிக்கைக்காக வீணடிப்பது அவர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது.
In the hotel washroom, these boys are taking handwash in their hands and pouring it into gutter.
Why do Indians think such acts are cool ? pic.twitter.com/hoa9GylVfI
— Oppressor (@TyrantOppressor) March 11, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞர்களைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “நல்ல ஆடைகளை அணிந்திருப்பதாலேயே ஒருவர் நாகரீகமானவராக மாறிவிட முடியாது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி” என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். “இப்படிப்பட்டவர்களால் தான் பொது வசதிகள் சீரழிகின்றன, இது ஒரு முட்டாள்தனமான செயல்” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெறும் ‘ஆன்லைன் அட்டென்ஷனுக்காக’ பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், வீணாக்குவதும் வளர்ந்து வரும் இளைஞர் சமுதாயத்தின் தவறான போக்கையே காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
