தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சிக்கந்தராபாத் பகுதியில், டிராஃபிக் காவலர் ஒருவரின் துரித செயலால் முதியவர் ஒருவர் மறுபிறவி எடுத்துள்ள சம்பவம் இணையத்தில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. சங்கீத் சந்திப்பில் உள்ள இஸ்கான் (ISKCON) கோவில் அருகே முதியவர் ஒருவர் கார் ஓட்டிச் சென்றபோது, அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது. இதனைப் பார்த்ததும் அங்கிருந்த மற்றவர்கள் திகைத்து நிற்க, அங்கு பணியில் இருந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காரின் கதவைத் திறந்துள்ளார்.
हैदराबाद के सिकंदराबाद में ट्रैफिक पुलिस की सतर्कता और मानवता की मिसाल देखने को मिली। संगीत क्रॉसरोड्स स्थित ISKCON मंदिर के पास एक बुजुर्ग व्यक्ति को गाड़ी चलाते समय अचानक दिल का दौरा पड़ गया, जिससे कार बेकाबू होकर डिवाइडर पर चढ़ गई। मौके पर तैनात ट्रैफिक कॉन्स्टेबल ने स्थिति को… pic.twitter.com/my3Wak2dkb
— AajTak (@aajtak) March 10, 2026
உள்ளே சுயநினைவின்றி இருந்த முதியவரைப் பார்த்த அந்த காவலர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவருக்கு அங்கேயே முதலுதவியாக சி.பி.ஆர் (CPR) அளிக்கத் தொடங்கினார். காவலரின் விடாமுயற்சியால் அந்த முதியவருக்கு மீண்டும் சுவாசம் திரும்பியதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உரிய நேரத்தில் காவலர் காட்டிய அந்த மனிதாபிமானமும், துணிச்சலும் ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “கடமை உணர்வையும் தாண்டி மனிதநேயத்துடன் செயல்பட்ட அந்த காவலருக்கு ராயல் சல்யூட்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
