சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், சாலையில் திடீரென புகுந்த வெறிபிடித்த எருமை மாடு பொதுமக்களைத் தாக்கிப் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கூட்டரில் சென்ற ஒருவரை அந்த எருமை ஆக்ரோஷமாகத் முட்டி காற்றில் தூக்கி வீசியதுடன், கீழே விழுந்த அவரை மிதிக்க முயன்ற பயங்கரக் காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய நிலையில், அந்த எருமை அருகில் இருந்த கடைக்குள்ளும் புகுந்து அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டது.
A Buffalo got mad and created chaos, Nalasopara East
pic.twitter.com/d1DadoRKXg— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 10, 2026
“>
‘ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, நகரங்களில் சுற்றித் திரியும் தெரு விலங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்த அச்சத்தையும் விவாதத்தையும் மீண்டும் கிளப்பியுள்ளது.
