உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நாக்லா பாவ் பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் சினிமா பாணியில் ஊழியர்களை மிரள வைத்துவிட்டு, பணம் செலுத்தாமல் கார் ஓட்டுநர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த அந்த ஓட்டுநர், எரிபொருள் நிரப்பி முடித்தவுடன் பணம் கொடுக்காமல் திடீரென காரை வேகமாகத் திருப்பிக் கொண்டு பம்பை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ஊழியர்களை இடிப்பது போல் காரைச் சுழற்றி ஓட்டிய ஓட்டுநரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
फ़िरोज़ाबाद: पेट्रोल भरवाया, 3 चक्कर लगाए और बिना पैसे दिए हो गया फरार
◆ पूरी घटना पंप पर लगे CCTV कैमरों में कैद हो गई#ViralVideo | UP pic.twitter.com/S9wseBjT7b
— News24 (@news24tvchannel) March 11, 2026
“>
இந்த அதிரடி காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கார் ஓட்டுநரை அடையாளம் கண்டுள்ளதோடு அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
