திரைப்படப் படப்பிடிப்புத் தளங்களில் சாகசக் காட்சிகளைப் படமாக்கும்போது எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு ஆக்ஷன் காட்சியில் நடித்த ஸ்டண்ட் பெண் ஒருவர் மீது எதிர்பாராத விதமாகத் தீப்பற்றிக் கொள்கிறது. திட்டமிடப்பட்ட நெருப்புக் காட்சிதான் என்றாலும், ஒரு கட்டத்தில் தீப்பொறி மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியதால் அங்கிருந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் அலறினர். ஒரு நொடி அந்தப் பெண்ணே தீப்பிழம்பாக மாறிய காட்சி காண்போரை உறைய வைத்தது.
A woman was accidentally set on fire during an action scene! 😱🎬 pic.twitter.com/oIHPMkuuxA
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) March 11, 2026
உடனடியாகச் செயல்பட்ட படக்குழுவினர், தீயணைப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து சில நொடிகளிலேயே தீயை அணைத்தனர். புகை மற்றும் நுரைகளுக்கு நடுவே அந்த ஸ்டண்ட் பெண் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த உயர்தரப் பாதுகாப்பு உடைகள் (Safety Gear) தான் பெரிய விபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. “சினிமாவுக்காக உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் இவர்களின் அர்ப்பணிப்பு பெரியது” என்று ஒரு தரப்பினரும், “இவ்வளவு ரிஸ்க் தேவையா?” என்று மற்றொரு தரப்பினரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
