இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரோகித் சர்மா, மும்பை விமான நிலையத்தில் சிறுமி ஒருவரின் பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக வதோதரா செல்ல மும்பை விமான நிலையம் வந்தபோது, அவரைச் சுற்றி ரசிகர்கள் கூட்டம் மொய்த்தது.
அப்போது கூட்ட நெரிசலில் ஒரு சிறுமி தனியாக நின்று கொண்டிருப்பதை கவனித்த ரோகித், உடனே அந்த சிறுமியின் கையை பிடித்து அவளது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். இந்தச் சம்பவத்தின் போது, பாதுகாப்பற்ற முறையில் குழந்தையை நெரிசலில் விட்டதற்காக அந்தப் பெற்றோரை ரோகித் சர்மா கடிந்து கொண்டார்.
At the airport, when Rohit Sharma saw that some parents had left their young daughter standing in the path he was walking through, he became concerned. Rohit gently held the little girl’s hand, took her to her parents, and told them that this was wrong and that children should… pic.twitter.com/eEhtv0PTUo
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) January 7, 2026
“>
மேலும் இப்படி குழந்தையை கூட்டத்தின் நடுவே கொண்டு வராதீர்கள், நீங்கள் செய்வது தவறு என்று அவர் கண்டிப்புடன் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கவும், தங்களைக் காட்டிக்கொள்ளவும் குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைக்கும் பெற்றோரின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக்காட்டிய ரோகித் சர்மாவின் இந்தச் செயல், இணையதளவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
