ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள், தங்களது பயணத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை ஆங்காங்கே இருக்கைகளுக்கு நடுவே சிதறவிட்டுச் சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்ஷிகா கட்டாரியா என்ற ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “அன்பான பயணிகளே,உங்களால் விமான டிக்கெட் வாங்க முடிகிறது என்றால், கொஞ்சம் அடிப்படை ஒழுக்கத்தையும் உங்களோடு கொண்டு வர முடியும்; விமானம் லேண்ட் ஆகிவிட்டது, ஆனால் அடிப்படை ஒழுக்கம் இன்னும் விமானத்திற்குள் போர்டு ஆகவே இல்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அடுத்தடுத்த விமானப் பயணங்களுக்குத் தங்களது துப்புரவுப் பணியாளர்கள் மிகக் குறைந்த நேரத்திலேயே கடுமையாக உழைத்து விமானத்தைச் சுத்தம் செய்கிறார்கள் என்பதால், பயணிகள் அனைவரும் தங்களது குப்பைகளைத் துப்புரவுச் சுற்றின்போது ஊழியர்களிடம் நேரடியாக ஒப்படைத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
View this post on Instagram
“>
பேப்பரில் படித்தவர்களாக இருக்கும் பயணிகள், தங்களது பொது நடமாட்ட ஒழுக்கத்திலும் அதனை வெளிப்படுத்த வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
