பெங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற தனி விமானம் ஒன்றின் விமானி, அந்த விமானத்தில் பணிபுரிந்த 26 வயது விமானப் பணிப்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானி, பணிப்பெண்ணை பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்தப் பணிப்பெண் முதலில் பெங்களூரு பேகம்பேட் போலீசில் புகார் அளித்தார். விமானம் ஐதராபாத் சென்றடைந்ததும், அங்கும் முறைப்படி புகார் அளித்தார். இந்தச் சம்பவம் பெங்களூருவில் நடந்ததால், ஐதராபாத் போலீசார் வழக்கை ஹலாசுரு போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். அதன்படி, தற்போது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விமானியைக் கைது செய்யத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
