விமான பயணத்திற்கு முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சோதனை செய்வார்கள். அதில் சில பொருட்கள் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும்.

அத்தகைய பொருள்களில் ஒன்றுதான் தெர்மோமீட்டர். இதில் பாதரசம் இருப்பதால் அதனை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. ஏனென்றால் இதில் உள்ள பாதரசம் அலுமினியத்தை சேதப்படுத்தும். இந்த பாதரசத்தால் விமானம் விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.