இந்தியாவில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது EPFO அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால் அவர்களின் பிஎஃப் தொகை தானாக பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதற்கு உறுப்பினர்கள் மூன்று விண்ணப்ப படிவங்கள் போன்ற படிவங்களை பயன்படுத்த வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை.

இந்த புதிய மாற்றம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பணியாளர் ஒருவர் தன்னுடைய பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும்போது அவருடைய UAN நம்பர் புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். அதை செய்தால் மட்டுமே அவர்களுடைய பி எப் அக்கவுண்டில் பணம் மாற்றப்படும். இந்த செயல்முறையை செய்யும்போது பல குளறுபடிகள் ஏற்படுவதால் மத்திய அரசு தற்போது இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.